YouTurn

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பெற்ற ஓட்டுகள் குறித்து பரவும் வதந்திகள்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பெற்ற ஓட்டுகள் குறித்து பரவும் வதந்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

சென்ற சட்டமன்றத் தேர்தல் - பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?

X Link | Archive Link


விரிவான விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான திருவேங்கடம், சமீபத்தில் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமும் அரசியல் வட்டாரங்கள் இடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


இந்நிலையில், “பெரும் அரசியல் தலைவரின் மகனான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலையின் பின்னணி?” என்று குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் பரவி வரும் பதிவில், சென்ற முறை அவர் போட்டியிடவில்லையே என்ற கேள்விக்கு, “சென்ற முறை' வெற்றி பெற்றார் என்று நான் குறிப்பிட்டது இறந்த காலம். இறந்த காலம் என்பதில்  2011 ஆம் ஆண்டும் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் , கடந்த 2021 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் பங்குபெறவில்லை என்பதை அறிய முடிந்தது.


மேலும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்தோம். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஆர்ம்ஸ்ட்ராங் 4004 வாக்குகள் பெற்றார் என்பதை அறிய முடிந்தது. 


அத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 68,677. இருவருக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் 64,673. எனவே மு.க.ஸ்டாலின் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும தவறானவை




மேலும் படிக்க:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி எனப் பரவும் பழைய செய்தி

மேலும் படிக்க:

அங்கப்பா வாக்குச்சாவடியில் 830 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை சொன்ன பொய்!


முடிவு:

நம் தேடலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க